சங்ககிரி விவேகானந்தா மகளிர் நிறுவனங்களில் நடைபெற்ற உலக மகளிர் தினவிழா
சங்ககிரி விவேகானந்தா மகளிர் நிறுவனங்களில் நடைபெற்ற உலக மகளிர் தினவிழாவில் ஆசிய மகளிர் பவர் லிஃப்டிங் சாம்பியன் ஜாஸ்மின் பங்கேற்றார்
சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அங்கங்களான விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சுவாமி விவேகானந்தா நேச்சரோபதி யோகா மருத்துவக் கல்லூரி, விவேகானந்தா பார்மஸி மகளிர் கல்லூரி, விவேகானந்தா நர்சிங் மகளிர் கல்லூரி, இரவீந்தரநாத் தாகூர் கல்வியியல் மகளிர் கல்லூரி, விஸ்வபாரதி கல்வியில் மகளிர் கல்லூரிகளின் சார்பில் உலக மகளிர் தினவிழா சங்ககிரி விவேகானந்தா ஸ்ரீ நிவாசா மஹாலில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனகைளின் தாளாளர் மற்றும் செயலர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். நிர்வாகஇயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணைநிர்வாக இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், வைஸ் சேர்மன் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி, இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, செயல் இயக்குநர் டாக்டர் குப்புசாமி, முதன்மை நிர்வாகிகள் பேராசிரியர் சொக்கலிங்கம், பேராசிரியர் வரதராஜீ, திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநர் குமாரவேல், கல்லூரி முதல்வர்கள் டாக்டர் சுரேஷ்குமார், டாக்டர் ஜோதி நாயர், டாக்டர் ஆனந்த குமார், டாக்டர் ஆரோக்கியசாமி, டாக்டர் அழகு சுந்தரம், நர்சிங் துணை முதல்வர் டாக்டர் மாலதி, அட்மிஷன் அதிகாரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன், டெக்ஸ்டைல் ஃபேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் ஃபேஷன் துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் சி.கே.இரவிசங்கர், வேலை வாய்ப்புத் துறை அதிகாரி அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக சங்ககிரி வருவாய் கோட்ட அலுவலர் லோகநாயகி, சங்ககிரி வட்டார மின்சாரத் துறை நிர்வாக பொறியாளர் உமாராணி, டி.வி புகழ் உலக சாதனையாளர் ஐஸ்வர்யா, ஆசிய மகளிர் பவர் லிஃப்டிங் சாம்பியன் ஜாஸ்மின், சங்ககிரி டவுன் பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் உஷா மற்றும் முன்னாள் சாதனை மாணவிகள் பங்கேற்றனர். சாதனைப் பெண்கள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். கல்லூரி நிர்வாகம் சார்பாக சாதனைப் பெண்கள் 12 பேருக்கு பென்னாடை மற்றும் நினைவுக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தலைமையுரையாற்றிய தாளாளர் டாக்டர் மு.கருணாநிதி, “பெண்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்; ஒவ்வொரு ஆணினின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்; இரண்டு கண்களும் தெரியாத மாற்றுத் திறனாளியான விவேகானந்தா மாணவி மனம் தளராமல் அயராது படித்து வாழ்க்கையில் முன்னேறி அரசு பள்ளியில் ஆசிரியராகி சாதனை படைத்துள்ளார்; ஆண்களை விட பெண்கள் பற்பல துறைகளில் மிகப்பெரிய சாதனை புரிந்து வருகின்றனர்”என்று குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர்கள் லோகநாயகி, உமாராணி, ஐஸ்வர்யா, ஜாஸ்மின், உஷா ஆகியோர் ‘பெண்கள் சுய ஒழுக்கம், கடமை, கண்ணிம், கட்டுப்பாட்டுடன் நடந்து சுய சார்புடன் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி கொள்ள வேண்டும்; ‘பெண்’என்பதற்காக எந்த சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாது; சமுதாய சிந்தனையுடன் திறமைகளை வளர்த்துக் கொண்டு தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைக்க வேண்டும்’என்று குறிப்பிட்டனர். அதன் பிறகு சுவாமி விவேகானந்தா நேச்சரோபதி யோகா மருத்துவக் கல்லூரியின் மாணவிகள் சார்பில் மஹாசிவராத்திரியை மையப்படுத்தி பிரமாண்டமான முறையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. சங்ககிரி விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 4,000 மாணவிகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உலக மகளிர் தினவிழா மற்றும் யோகா நிகழ்ச்சியை கண்டு கழித்தனர். அதன் பிறகு ‘இன்றைய சூழலில் பெண்களுக்கு மகிழ்ச்சி வீட்டிலா? வெளியிலா?’ என்ற தலைப்பில் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக ‘கலக்கப் போவது யாரு புகழ்’பழனி கலந்து கொண்டார். இருதரப்பிலும் டி.வி புகழ் நகைச்சுவை நாயகன் ஆசிரியர் தங்கதுரை, அசத்தல் மன்னன் பல குரல் பவானி பாலு, கவிஞர் பூபதி, நாவுகரசி மணப்பாறை லலிதா, உலக சாதனை நாயகி சேலம் ஐஸ்வர்யா, பட்டிமன்ற நாயகி காரைக்கால் யோகதர்ஷினி ஆகிய பேச்சாளர்கள் பங்கேற்று இன்னிசை பாடல்களுடன் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர். உலக மகளிர் தினவிழா ஏற்பாடுகளை விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் மாணவியர் அமைப்பினர் மற்றும் துறைத் தலைவர்கள் டாக்டர் மைதிலி, டாக்டர் கலைவாணி, பேராசிரியர் தனலட்சுமி, டாக்டர் லோகநாயகி, டாக்டர்அபிதா, பேராசிரியர் சுகுணா, பேராசிரியர் சண்முகப்பிரியா, டாக்டர் பிரபாகரன், பேராசிரியர் பிரபுகுமார், டாக்டர் மெய்வேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.