உடையநாடு பள்ளியில் இஸ்லாமிய பண்பாட்டு விழா
உடையநாடு ராஜராஜன் பள்ளியில் இஸ்லாமிய பண்பாட்டு விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-20 15:03 GMT
பண்பாட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் உடையநாடு ராஜராஜன் பள்ளியில் இஸ்லாமிய பண்பாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர் கான்முகமது தலைமை வகித்தார்.
.ஊமத்தநாடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா அப்துல் ஜபார், சேதுபாவாசத்திரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இப்ராகிம்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர் . அரபி பாட ஆசிரியர் பகாவுதீன் உலவி வரவேற்றார்.
மாணவர்கள் இஸ்லாமிய வாழ்க்கை முறை குறித்தும், நபிகள் நாயகத்தின் போதனைகள் மற்றும் குர்ஆனின் சூராக்களை மனனம் செய்து ஓதிக்காட்டினர். விழாவில் மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் நன்றி கூறினார் .