உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி
உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-22 12:53 GMT
ஜல்லிக்கட்டு போட்டி
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்து உள்ள உலகம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான புனித அந்தோணியார் கோவில் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 750 காளைகள் மற்றும் 430 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். இதனை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டியில் அமைந்துள்ள நூறு ஆண்டுகள் பழமையான புனித பெரிய அந்தோனியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.