திமுக வேட்பாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்த ஜமாத் நிர்வாகிகள்
பெரம்பலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருவை சந்தித்த வி.களத்தூர் ஜமாத் நிர்வாகிகள் அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.;
Update: 2024-04-09 07:24 GMT
அருண்நேருவை சந்தித்த ஜமாத் நிர்வாகிகள்
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேருவை, பெரம்பலூர் பாலக்கரை பகுதியிலுள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், வி.களத்தூர் ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து, அவருக்கு சால்வை அணிவித்துஅவருக்கு சால்வை அணிவித்து தங்களது ஆதரவைத் தெரிவித்து, வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்வின் போது பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவங்கர், அப்துல்கரீம் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.