வாணாபுரத்தில் ஜமாபந்தி டி.ஆர்.ஓ., ஆய்வு

வாணாபுரத்தில் ஜமாபந்தி டி.ஆர்.ஓ., ஆய்வு

Update: 2024-06-15 06:09 GMT

டி.ஆர்.ஓ., ஆய்வு

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. இதில், பட்டா மாற்றம், நிலம் அளவீடு, வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை கோருதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் உட்பட வருவாய்த்துறை சார்ந்த சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். அரியலுார் குறுவட்டத்தைச் சேர்ந்த 10 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று நடந்தது. இதனை கள்ளக்குறிச்சி டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது, வாணாபுரம் தாசில்தார் குமரன், தனி தாசில்தார் ராஜலட்சுமி, மண்டல துணை தாசில்தார்கள் சேகர், சரவணன், லலிதா, வருவாய் ஆய்வாளர் அன்பழகன், வட்டார துணை ஆய்வாளர் பிச்சைமணி, குறுவட்ட நில அலுவலர்கள் சரவணசக்தி, கண்ணன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். வரும், 18ம் தேதி அரியலுார் குறுவட்டத்தைச் சேர்ந்த 10 வருவாய் கிராமங்களுக்கும், 19 மற்றும் 20ம் தேதி ரிஷிவந்தியம் குறுவட்டத்திற்கும், 21 மற்றும் 24ம் தேதி மணலுார்பேட்டை குறுவட்டத்திற்கும் ஜமாபந்தி நடக்கிறது.
Tags:    

Similar News