புகழூரில் மூன்றாவது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி
புகழூரில் மூன்றாவது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
புகழூரில் மூன்றாவது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. புகழூரில் 3வது நாள் ஜமாபந்தியில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி துணை ஆட்சியர் சைபுதீன் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தனசேகர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் மோகன்ராஜ், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பானுமதி, மண்டல துணை வட்டாட்சியர் கிருஷ்ணவேணி, புகழூர் நகராட்சி தலைவர் குணசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜூன் 18ஆம் தேதி முதல் நாளும், ஜூன் 20ஆம் தேதி இரண்டாவது நாளாகவும்,
இன்று மூன்றாவது நாளாக ஜமாபந்தி நிகழ்ச்சி புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1433 பசலி வருவாய் தீர்வாயத்தில், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை வகுப்பு சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிட சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று, கணினி சிட்டா பெயர் திருத்தம்,
மின்சார இணைப்பு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம், தெருவிளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு குரு விவசாயி சான்று மற்றும் இதர மனுக்களையும் விண்ணப்பித்து பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று புகழூர் வட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனுக்களாக வழங்கினார்.