நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Update: 2024-02-25 12:10 GMT

பொதுமக்களுக்கு அன்னதானம் 

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் கடைத்தெருவில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமையில் கட்சியின் அமைப்பு செயலாளர் எஸ்.ஆசைமணி கட்சியின் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி பெரியமணி,ஒன்றிய துணை செயலாளர் திருமேனி,ஒன்றிய குழு உறுப்பினர் சுஜாதா ஆசைதம்பி,ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார்,புத்தகரம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா பூமிநாதன், ஏனங்குடி ஊராட்சி துணைத்தலைவர் இறையன்பு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.அதேபோல் திட்டச்சேரி கடை தெருவில் நகர செயலாளர் அப்துல்பாசித் தலைமையில் கழக அமைப்புச் செயலாளர் ஆசைமணி,வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் ஆகியோர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முயினுதீன்,நகர அவை தலைவர் மன்சூர்ஷா,ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் ஜெகபர் சாதிக் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News