தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை - பணம் திருட்டு...

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை , பணம் கொள்ளை. போலிசார் விசாரணை

Update: 2024-04-02 05:35 GMT

கொள்ளை

சேலம் அன்னதானப்பட்டி நெத்திமேடு ஆட்டுக்காரன் காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27), தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தார். மறுநாள் வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.5,000 ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News