அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக வெற்றிபெறலாம் – நீதிபதி நிவாஷ் பேட்டி

அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக ஜெயிக்கலாம் என உசிலம்பட்டியில் இளம்வயதில் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக தேர்வான நிவாஷ் பேட்டியளித்துள்ளார்.

Update: 2024-02-21 08:42 GMT

சிவில் நீதிபதி நிவாஸ்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்தவர் நிவாஷ் (24). தற்போது நடைபெற்ற தமிழ்நாடு சிவில் நீதிபதி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்துள்ளார். இவரது தாய் தனலட்சுமி நிவாஷ் சிறுவயது இருக்கும்போதே இறந்து விட்டார். அவரது தாய் இறந்தபின்பு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவரது தாத்தா பாட்டியான மணவாளன்-காசம்மாள் மற்றும் அவரது தாய் மாமன்களின் பராமரிப்பில் வளர்ந்து வெள்ளைமலைப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று கடந்த 2017-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

அதன் பின்பு கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை மதுரை அரசு சட்டக் கல்லூரியில் ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை தமிழ் வழியில் பயின்றுள்ளார். பின்பு மதுரை மாவட்ட நீதிமன்றம் மற்றும் உசிலம்பட்டி தாலுகா நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். தற்போது நடைபெற்ற தமிழ்நாடு சிவில் நீதிபதி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளார்.இவருக்கு உசிலம்பட்டியிலுள்ள அவரது அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பின் நிவாஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் வெள்ளைமலைப்பட்டி அரசுப்பள்ளியில்தான் படித்தேன்.இளம் வயதிலேயே தாயை இழந்து பாட்டி மாமா அரவணைப்பில் வளர்ந்தேன்.அவர்கள் நான் எப்படி படிக்கின்றேன் என பள்ளியில் ஆசிரியர்களிடம் வந்து கேட்பர்.இதே போல் ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை பற்றி ஆசிரியர்களிடம் கேட்டால் போதும். அரசுப்பள்ளயிலுள்ள ஆசிரியர்கள் சிறப்பாகத்தான் பாடம் நடத்துகின்றனர்.நாம்தான் அவர்களிடம் சந்தேகங்களை கேட்க வேண்டும்.அவர்கள் பதில் அளிக்க தயாராகதத்தான் உள்ளனர்.

தனியார் பள்ளிகளில் படித்தால்தான் கௌரவம் என்ற நினைப்பதை மாற்ற வேண்டும்.அரசு பல்வேறு நலத்திட்டகளை அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தி வருகின்றது.அரசுப்பள்ளியில் படித்து முன்னேறியவர்கள் வாழ்க்கை வரலாற்றை பார்க்க வேண்டும்.எனக்கு முன் கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் படித்த ஆதியன் என்பவர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது நான் தேர்வாகியுள்யேன்.நாளை யார் வேண்டுமாலும் வரலாம்.இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் கண்டிப்பாக ஜெயிக்கலாம் என்பது தெரிகின்றது.மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் சாதிக்க வேண்டும் எனக் கூறினார்.

Tags:    

Similar News