காளிஅம்மன் கோவில் பூ மிதி திருவிழா கோலாகலம்
எடப்பாடி போடிநாயக்கன்பட்டியில் ஸ்ரீ ஓம்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Update: 2024-01-18 09:26 GMT
எடப்பாடி அருகே போடிநாயக்கன்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஓம்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமம் போடிநாயக்கன்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஓம் காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த வாரம் புதன்கிழமை பூச்சாட்டு துவங்கி பக்தர்கள் கங்கணம் கட்டி விரதம் இருந்து இன்று விடியற்காலை முதலே பக்தர்கள் சரபங்கா நதி ஆற்றிற்க்கு சென்று பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு பல்வேறு அலகுகளை குத்திக்கொண்டு கோவில் வரை ஊர்வலமாக வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ ஓம் காளியம்மன் சுவாமியை வழிபட்டு சென்றனர்... பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.