வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொறுப்பு ஏற்பு

வட்டார வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணியிட மாற்றம்.;

Update: 2024-03-05 11:51 GMT
வட்டார வளர்ச்சி அலுவலர் பணிமாற்றம்

வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, ரிஷிவந்தியத்தில் பி.டி.ஓ.,க்களாக பணிபுரிந்த ரங்கராஜன் கள்ளக்குறிச்சிக்கும், சவரிராஜன் ஆட்சியர் அலுவலகத்தில் தணிக்கை பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பதிலாக கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்த சந்திரசேகரன் ரிஷிவந்தியம் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாகவும், திருக்கோவிலுாரில் பணிபுரிந்த நடராஜன் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாகவும் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News