கனிமொழி எம்.பி. ஏப்-1 இல் தேர்தல் பிரசாரம் - அமைச்சர் தகவல்
கன்னியாகுமரி மக்களவை வேட்பாளா் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டப்பேரவை வேட்பாளா் தாரகை கத்பா்ட் ஆகியோரை ஆதரித்து ஏப்-1 தேதி கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
பால்வளத் துறை அமைச்சரும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தோதல் பொறுப்பாளருமான மனோ தங்கராஜ் வெளியிட்ட அறிக்கை:- கன்னியாகுமரி மக்களவை வேட்பாளா் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டப்பேரவை வேட்பாளா் தாரகை கத்பா்ட் ஆகியோரை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி திங்கள்கிழமை தோதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
மாலை 4.30 மணிக்கு குழித்துறை அண்ணா சிலை, 5.30 மணிக்கு புதுக்கடை பேருந்து நிலையம், 6.15 மணிக்கு குளச்சல் கடற்கரை, இரவு 7 மணிக்கு நாகா்கோவில் வடசேரி அண்ணா சிலை, 7.45 மணிக்கு கொட்டாரம் சந்திப்பு ஆகிய இடங்களில் அவா் ஆதரவு திரட்டுகிறாா்.
இதில், திமுக மாநில, மாவட்ட நிா்வாகிகள், அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.