கன்னியாகுமரி : டெபாசிட் இழந்த அதிமுக, நாம் தமிழர் வேட்பாளர்கள்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ்,பாஜக தவிர்த்து அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

Update: 2024-06-05 04:43 GMT

பைல்  படம் 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நடந்து முடிந்த தேர்தலில் 10 லட்சத்து 19 ஆயிரத்து 532 வாக்குகள் பதிவாகி இருந்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படுவது வழக்கம்.  அந்த வகையில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 922 வாக்குகள் பெற்றவர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும்.  இதில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தவிர இதர வேட்பாளர்களான அதிமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 20 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழக்கின்றனர்.       மேலும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 950 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் ஆறில் ஒரு பங்காக 25 ஆயிரத்து 830 வாக்குகள் பெற்ற வர்களுக்கு டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்படும். அந்த வகையில் காங்கிரஸ் வேட்பாளர், பாரதிய ஜனதா வேட்பாளர் தவிர அதிமுக, நாம் தமிழர் கட்சி  உட்பட்ட 8 வேட்பாளர்களும்  டெபாசிட் தொகையை இழந்தனர்.
Tags:    

Similar News