கரூர் மாவட்டத்தில் 21.40 மில்லி மீட்டர் மழை பதிவு
கரூர் மாவட்டத்தில் நேற்று 21.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-05-10 05:46 GMT
தமிழகத்தில் கோடை வெயில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொளுத்தி வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் 111 டிகிரி வரை வெயில் அடித்து வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் சொல்ல முடியாத துயருக்கு ஆளாகி வந்த நிலையில், நேற்று கரூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் திடீரென இரவு மழை பெய்தது. மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூரில் ஒரு மில்லி மீட்டரும், அரவக்குறிச்சியில் 4.2 மில்லி மீட்டரும், அணைப்பாளையத்தில் 13.4 மில்லி மீட்டரும், க. பரமத்தியில் 2.8 மில்லி மீட்டர் என மொத்தம் 21.40-மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 1.78 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.