மேம்பால பணிக்காக கத்தேரி பிரிவு அடைப்பு
குமாரபாளையத்தில் மேம்பால பணிக்காக புறவழிச்சாலை கத்தேரி பிரிவு அடைக்கப்பட்டது.
By : King 24x7 Website
Update: 2023-12-10 17:12 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பால பணிகள் ஒரு மாதம் முன்பு துவங்கியது. சர்வீஸ் சாலையில் வாகனங்களை திருப்பி விட வேண்டி, பாதைகளை அகலப்படுத்தி, வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இரண்டு நாட்கள் முன்பு அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. தற்போது, பூமி பூஜை போடப்பட்டு பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது. இதற்காக கத்தேரி பிரிவு சாலை பகுதியில், பொதுமக்கள் சாலையை கடக்கும் பாதை டிவைடர்களால் அடைக்கப்பட்டன. தட்டான்குட்டை கிராமம், வேமன்காட்டுவலசு, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சர்வீஸ் சாலை வழியாக பல கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் நன்மைக்காக அமைக்கப்படும் பாலம் என்பதால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்தை பாராமல் சுற்றி சென்று வருகிறார்கள். குறுகிய காலத்திற்குள் பணிகள் நிறைவு செய்து, இந்த சாலையயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட கோரிக்கை விடுத்துள்ளனர்.