கேரள எல்லை முற்றுகை போராட்டம்- விவசாயிகள் அறிவிப்பு

அமராவதி ஆற்றின் உரிமைகளை மீட்கும் வகையில் கேரள எல்லை முற்றுகை போராட்டம் அமையும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2024-05-24 14:27 GMT

அமராவதி ஆற்றின் உரிமைகளை மீட்கும் வகையில் கேரள எல்லை முற்றுகை போராட்டம் அமையும். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு. சின்னதாராபுரத்தில், கேரள மாநிலம் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கரூர் மாவட்ட செயலாளர் தென்னிலை ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் , கோபாலகிருஷ்ணன், ரகுநாத் பெரியசாமி உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலோசனையின் முடிவில் செய்தியாளரை சந்தித்த சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையின் கடைமடை பகுதி கரூர் மாவட்டமாகும். அமராவதி அணைக்கு பல்வேறு நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. இதில் அமராவதி ஆற்றின் துணை ஆறான, கேரள மாநிலம் வழியாக வழிந்தோடி வரும் சிலந்தி ஆற்றில், வட்டவடா என்ற பகுதியில் கேரளா அரசு தடுப்பணை கட்டி வருகிறது. கேரளா அரசின் இத்தகைய நடவடிக்கை தடுக்கும் வகையில் மே 26 ஆம் தேதி கேரளா எல்லையில் உள்ள சின்னாறில் கரூர் மாவட்ட விவசாயிகள் அனைத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார். மேலும்,அமராவதி ஆற்றின் உரிமைகளை மீட்கும் வகையில் கேரள எல்லை முற்றுகை போராட்டம் அமையும் என்றார்.

Tags:    

Similar News