கிடேரி கன்றுகளுக்கான கருசிதைவு நோய் தடுப்பூசி

பெரம்பலூர் மாவட்டத்தில் கிடேரி கன்றுகளுக்கான கருசிதைவு நோய் தடுப்பூசி பணி பிப் 15ம் தேதி முதல் மார்ச் 15ம் தேரி வரை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-15 08:11 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் வரும்பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை கருசிதைவு நோய்க்கான தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இவ்வாண்டுக்கான 3-வது சுற்று தடுப்பூசி முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற உள்ளது.

வாழ்நாள் எதிர்ப்பு சக்தி கொண்ட தடுப்பூசி என்பதால் ஒருமுறை தடுப்பூசி செலுத்துவது போதுமானது. நான்கு மாதம் முதல் 8 மாதம் வயது வரை உள்ள கிடேரி கன்றுகளுக்கு இந்த தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே அனைத்து கால்நடை வளர்ப்போர் தங்கள் கிராமத்தில் கருசிதை நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ள வரும் பொழுது முகாமில் கலந்து கொண்டு தங்கள் கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறும்படி மாவட்ட ஆட்சியர கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News