செம்மண் இயந்திர பெல்டில் சிக்கி சூளை உரிமையாளர் கை துண்டிப்பு
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது;
Update: 2023-12-20 06:41 GMT
செம்மண் இயந்திர பெல்டில் சிக்கி சூளை உரிமையாளர் கை துண்டிப்பு
கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மகன் தன்ராஜ் ( 30 ) செங்கல் சூளை வைத்துள்ளார். தன்ராஜ் வழக்கம்போல் நேற்று காலை 9:00 மணியளவில் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது செம்மண் செல்லும் இயந்திரத்தில் உள்ள பெல்ட்டில், தன்ராஜின் இடது கையின் சட்டை பகுதி சிக்கியது. இதில் கையினை வெளியே எடுப்பதற்குள் தன்ராஜின் இடது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. உடன், ரத்த வெள்ளத்தில் இருந்த தன்ராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக கோயம்புத்துார் தனியார் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.