மழலையருக்கு பட்டமளிப்பு விழா

உச்சிப்புளி அருகே டாக்டர் இளையராஜா குளோபல் அகாடமி பள்ளியில் 5-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-03-03 11:45 GMT

மழலையருக்கான பட்டமளிப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே பிரப்பன் வலசை டாக்டர் இளையராஜா குளோபல் அகாடமி பள்ளி 5-ம் ஆண்டு விழா மற்றும் மழலையருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை நொச்சியூரணி டாக்டர் இளையராஜா குளோபல் அகாடமி பள்ளி 5-ம் ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி நிறுவனர் டாக்டர் இளையராஜா தலைமை வகித்தார். செயலர் மணிகண்டன ராஜா முன்னிலை வகித்தார். முதுநிலை முதல்வர் விஜயலட்சுமி வரவேற்புரையாற்றினார்.

பள்ளி முதல்வர் சைலஜா ஆனந்தி குத்து விளக்கு ஏற்றி வைத்து ஆண்டறிக்கை வாசித்தார். 75 குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் நாகேந்திரன், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை. உதவி பேராசிரியர் மணிகண்டன் ஆகியோர் பட்டம் வழங்கினார். இப்பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து மாணவர் சந்தோஷ் மற்றும் மாணவி தட்சாயினி ஆகியோர் பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர்.

மாணவ, மாணவியர் பங்கேற்ற தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பெற்றோரில் குலுக்கல் முறையில் தேர்வான ஒருவருக்கு பரிசும் மற்றும் விழாவிற்கு வந்த பெற்றோர் அனைவருக்கும் ஆறுதல் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிகள் அனைத்தையும் மாணவ - மாணவியர் தொகுத்து வழங்கினர். கலைக்குழுத் தலைவர் சரண்யா, அமைப்பாளர் முகாயினி விழா ஏற்பாடுகளை செய்தனர். விழா நிறைவில் மாணவன் கிருத்திக் நன்றி கூறினார்.

Tags:    

Similar News