3 யூனிட் கொள்ளிடம் ஆற்று மணலுடன் லாரி பறிமுதல்
மயிலாடுதுறையில் கொள்ளிடம் ஆற்று மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்து நாகை மாவட்ட கனிமவள துணை இயக்குனர் பாண்டியராஜன் நடவடிக்கை எடுத்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-30 12:35 GMT
மயிலாடுதுறை பகுதியில் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கொள்ளை நடைபெற்றுவருவதாகவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கிடைத்த தகவலின்பேரில் நாகை மாவட்ட கனிமவள துறை துணை இயக்குநர் பாண்டியராஜனுக்கு தவல் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக அலுவலர்களுடன் மயிலாடுதுறை வந்தபோது திருஇந்தளுர் பகுதியில் பைக்கில் 2பேர் பைலட்போல் பாதுகாப்புடன் சென்ற லாரியை மடக்கி நிறுத்தியபோது பைக்கில் வந்தவர்கள் ஓட்டுனரை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
லாரியை சோதனை செய்ததில் 3 யூனிட் கொள்ளிடம் ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல்நிலையத்தில்ஒப்பபடைத்தனர். மயிலாடுதுறை போலீசார் வழக்குப்ப பதிவுசெய்து ஓட்டுனரைத் தேடி வருகின்றனர் .