குமரி: ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல்

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-05-21 05:32 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.  தற்போது குமரி மாவட்டத்தில் வைகாசி மாதம் பிறந்ததை தொடர்ந்து திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கின்றன. இதற்காக வெளியூரில் வசிப்பவர்கள் குமரிக்கு வருவது வழக்கம்.        மேலும் முக்கியமான கோவில் விழாக்களிலும் கலந்து கொள்ள வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

சொந்த ஊருக்கு வந்தவர்கள் நேற்று முதல் பணிபுரியும்  இடங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் பஸ் ரயில் நிலையங்களில் அதிக கூட்டமாக இருந்தது. தனியார் பஸ்களில் அதிகமானோர் பயணிக்கத் சென்றனர்.        இந்த நிலையில் இந்த சீசனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு செல்லும் பஸ்களில் நபர் ஒருவருக்கு ரூ.  2,700 முதல் 3,000 வரை வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

இது பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.   இன்னும் பத்து நாட்களில் கோடை விடுமுறை முடிந்து வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கு திரும்புவார்கள். அந்த சமயங்களில் இதுபோன்று கட்டளை கொள்ளை நடைபெறாமல் தடுக்கவும், இதுபோன்ற முறையற்ற கட்டண வசூலை முறைப்படுத்தவும்  அந்தந்த மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் தனி குழு அமைக்கப்பட்டு கண்காணிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News