வேலையில் விரோதம் காரணமாக கூலித் தொழிலாளி கொலை - மருத்துவ பரிசோதனையில் சிக்கிய கொலையாளி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஊதியூர் பகுதிக்குட்பட்ட புங்கந்துறை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணையில் வேளையில் விரோதம் காரணமாக கூலி தொழிலாளியை மற்றொரு கூலித்தொழிலாளி கொலை செய்துவிட்டு நாடகம் ஆடியது அம்பலம்;
Update: 2024-02-25 11:59 GMT
மருத்துவ பரிசோதனையில் சிக்கிய கொலையாளி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் பகுதிக்குட்பட்ட புங்கந்துறை ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணை இயங்கி வருகிறது. இங்கு தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த விருப்பாச்சி வயது 55 என்ற கூலித் தொழிலாளி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வியாழன்கிழமை இரவு வேலை முடித்துவிட்டு வழக்கம் போல் தூங்க சென்ற நிலையில் அடுத்த நாள் காலையில் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனை அடுத்து ஊதியூர் போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்த கூலித் தொழிலாளியின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மருத்துவ பரிசோதனையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சாதாரண வயது மூப்பின் காரணமாக இறந்திருக்கலாம் என்று பார்த்து நிலையில் கொலை என்று மருத்துவர்கள் போலிசாருக்கு உறுதி அளித்தனர். இதனை அடுத்து விசாரனையில் ஈடுபட்ட போலிசார் சந்தேகத்தின் பேரில் உடன் வேலை பார்த்த மற்றும் தங்கியிருந்த அறையில் உடனிருந்தவர்களை விசாரித்தனர். இந்த விசாரணையில் ஜோய் வர்கீஸ் வயது 51 என்ற மற்றொரு தொழிலாலி வேலையில் முன் விரோதம் காரணமாக இரவில் தூங்கும் போது கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து கொலையாளியை கைது செய்து இரவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். உடனிருந்தவரே கொலைசெய்தது ஊதியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.