மலைப் பாதையில் நிலச் சரிவு அச்சன்கோவில் சாலை துண்டிப்பு
கேரளா செல்லும் வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்துகள் பாதிப்பு
Update: 2023-12-06 01:44 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரையிலிருந்து கேரளம் செல்லும் சாலையில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இம்மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் மற்றொரு பிரதான நுழைவாயில் மேக்கரை - அச்சன்கோவில் சாலையாகும். ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், இந்தச் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகளுடன் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது . பாதிக்கப்பட்ட சாலைகளை நெடுஞ்சாலை கட்டுமானம்- பராமரிப்பு உதவிப் பொறியாளா் முத்துராஜ், வனவா் சுகந்தி ஆகியோா் ஆய்வு செய்தனா். சீரமைப்புப் பணி நடைபெற்றதையடுத்து, போக்குவரத்து தொடங்கியது.