தாமதமாக புறப்பட்டு சென்ற ரயில்கள்

கனமழையால் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன;

Update: 2023-12-18 08:27 GMT

திண்டுக்கல்லில் இருந்து தாமதமாக புறப்பட்டு சென்ற ரயில்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று முதல் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் ரெயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 2.40 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வரும். அந்த ரெயில் இன்று காலை 3 மணிக்கு திண்டுக்கல் வந்தடைந்தது. ஆனால் 2 மணி நேரம் தாமதமாக 4.58 மணிக்குதான் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது. இதே போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 2.17 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வரும் அந்த ரெயில் 5.55 மணிக்கு வந்தது. சுமார் 3 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News