வந்தவாசி:மறைந்த திமுக அமைப்புசாரா தொழிலாளர் அணி நிர்வாகி படத்திறப்பு
வந்தவாசியில் மறைந்த திமுக அமைப்பு சாரா அணி மாவட்ட அமைப்பாளர் ஏ பிச்சைக்கண்ணு படத் தினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி இரங்கல் உரை நிகழ்த்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த செம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.பிச்சைகண்ணு (வயது 50) திமுக அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 31ந் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது படத்திறப்பு விழா நிகழ்ச்சி சென்னாவரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ். தரணி வேந்தன் தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே ஆர் சீதாபதி, எம்எல்ஏக்கள் வந்தவாசி எஸ். அம்பேத்குமார், செங்கம் மு.பெ.கிரி, செய்யாறுஒ.ஜோதி, முன்னாள் எம். பி எம் துரை, முன்னாள் எம்எல்ஏ நா.பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு கலந்துகொண்டு பிச்சைக்கண்ணு படத்தினை திறந்து வைத்து பேசியதாவது: பிச்சைக்கண்ணு ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியில் பணியாற்றி வந்தவர். கொண்ட கொள்கையில் பிடிப்பானவர் வந்தவாசியில் கடந்த 1999ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பாமக அப்போது போட்டியிடாமல் நடுநிலை வகித்தது. அப்போது இவரை அழைத்து தலைமையே நடுநிலை வகிக்கின்றது ஆகவே தாங்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறினேன். அதற்கு தலைமை சொல்லாமல் நான் எதையும் செய்ய முடியாது. கட்சியினர் அவரவர் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு செலுத்தலாம் அந்த வாக்கு வாங்குவதற்கு தங்கள் முயற்சி செய்யுங்கள் என கூறி சென்றார்.எப்பொழுதுமே கொள்கைவாதியாக இருந்தவர். கடந்த ஆண்டு தமது தாய் கழகத்தில் இணைந்தார். அவர் தற்போது வேண்டுமானால் திமுகவில் இணைந்திருக்கலாம். ஆனால் அவர் எப்பொழுதும் திராவிட கொள்கையின் ஈர்ப்பால் தங்களது குழந்தைகளுக்கு செண்பகவல்லி, அன்பரசன், அன்புமணி என தமிழ் பெயரை சூட்டி மகிழ்ந்தவர்.ஆகவே அவர் விட்டுச்சென்ற பணியை அவரது குடும்பத்தினர் கழகப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் எச். ஜலால், நகர செயலாளர் எ.தயாளன், ஒன்றிய செயலாளர்கள் டி. டிராதா, ப. இளங்கோவன், கே.ஆர்.பி பழனி, சி.ஆர் பெருமாள், சுந்தரேசன், தெள்ளார் ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி, இளங்கோவன், தெள்ளார் ஆ கோபிநாதன், பாஞ்சரை நா.பட்டாபிரா மன். அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ. மணிகண்டன், துணைதலைவர் ஆர்.பாரி, நகர அவைத் தலைவர் நவாப்ஜான், மாவட்ட பிரதிநிதிகள் கே. ஆதி கேசவன், என்.ஏழுமலை, துணைச்செயலாளர் பொன். சங்கர், தென்னாங்கூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்.தினகரசு, நகர் மன்ற உறுப்பினர் நாகூர்மீரான், கிளை செயலாளர் சாகுல் அமீது உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி துணைத் தலைவர் அன்னை கே.சீனுவாசன் நன்றி கூறினார்.