”சட்டமன்ற நாயகர் – கலைஞர்” விழாக்குழு கருத்தரங்கு

”சட்டமன்ற நாயகர் – கலைஞர்” விழாக்குழு கருத்தரங்கில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் சிறப்புரை

Update: 2023-12-07 10:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளை நடத்துவதெற்கென தமிழ்நாடு அரசால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' என்ற குழு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்களின் தலைமையில் முன்னாள் பேரவைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்/நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ”நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பின் கீழ் இரண்டு நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, இராசிபுரம், ஆண்டகளூர்கேட், திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் சிறப்புரை ஆற்றினார்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரி, அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மற்றும் இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ”சட்டமன்ற நாயகர் - கலைஞர்" விழாக்குழு கருத்தரங்கில் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன் சிறப்புரையாற்றி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்றப் பேரவை கூடுதல் செயலாளர் ந.இரவிசந்திரன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலக இணை செயலாளர் அய்யம் பெருமாள், நாமக்கல் நகர் மன்ற தலைவர் து.கலாநிதி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மு.செந்தில் குமார், சட்டமன்றப் பேரவை துணைச் செயலாளர் கே.ரமேஷ், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் முனைவர் நா.இராமலட்சுமி, கல்லூரி முதல்வர்கள் முனைவர்.அ.ராஜா, முனைவர்.மா.கோவிந்தராசு, முனைவர்.சி.பானுமதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News