லியோ திரைப்படம் வெளியீடு : நாமக்கல்லில் கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் இன்று வெளியானது. நாமக்கல் திரையரங்குகளில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை பார்த்து ரசித்தனர்.

Update: 2023-10-19 09:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது இன்று தமிழ்நாடு முழுவதும் லியோ திரைப்படம் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் கொண்டாடினர். அந்த வகையில், நாமக்கல் நகரில் உள்ள கே.எஸ்.திரையரங்கு மற்றும் எல்.எம்.ஆர் திரையரங்கில், விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, நடனம் ஆடியும் தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்களிடம் கேட்டபோது, “லியோ திரைப்படத்திற்கு மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது தவறு. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள், சர்ச்சைகள்தான் லியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. நிச்சயமாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும்” என்றும் கூறினர்.



Tags:    

Similar News