நல்லாட்சி வருவதற்கு காத்திருப்போம்-நடிகர் சூர்யா ரசிகர்களின் அரசியல் போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!

காமராஜர், விஜயகாந்த் படங்களோடு நடிகர் சூர்யா, நல்லாட்சி வருவதற்கு காத்திருப்போம் என்ற வாசகங்களோடு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2024-07-05 06:19 GMT
நல்லாட்சி வருவதற்கு காத்திருப்போம்-நடிகர் சூர்யா ரசிகர்களின் அரசியல் போஸ்டரால் மதுரையில் பரபரப்பு!

போஸ்டர்

  • whatsapp icon
காமராஜர், விஜயகாந்த் படங்களோடு நடிகர் சூர்யா, நல்லாட்சி வருவதற்கு காத்திருப்போம் என்ற வாசகங்களோடு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு. நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்விச்செலவை ஏற்று உதவி செய்து வருகிறார். மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நீட் தேர்வு, மதுவுக்கு எதிராக தனது கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறார். அரசியல் முன்னெடுப்பின்றி பொதுநலச்சேவையாக அறக்கட்டளை நடத்தி வரும் நடிகர் சூர்யாவை அவரது ரசிகர்கள் அவ்வப்போது போஸ்டர்கள் மூலம் அரசியலுக்கு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் சூர்யா நற்பணி இயக்கத்தை சேர்ந்த அவரது ரசிகர்கள் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரது படங்களோடு நடிகர் சூர்யா படத்தை இணைத்து நல்லாட்சி வருவதற்கு காத்திருப்போம் என ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News