நடப்போம் நலம் பெறுவோம்: மேயர், எம்எல்ஏ, 8 கி.மீ நடைபயிற்சி

தூத்துக்குடியில் நடந்த நடப்போம் நலம் பெறுவோம்- நடைபயிற்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்எல்ஏ, ஆகியோர் கலந்து கொண்டு 8 கி.மீ தூரம் நடந்தனர்;

Update: 2023-11-05 05:42 GMT

மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏ சண்முகையா நடைபயிற்சி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம்- சுகாதார நடைபாதை (8KM Health Walk) ஹெல்த் வாக் சாலையை திறந்து வைத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெல் ஹோட்டல் முன்புறம் இருந்து மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கௌரவ் குமார். துணை இயக்குனர் சுகாதார பணிகள் எஸ்.பொற்செல்வன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் நவீன் பாண்டியன், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி கிருபா, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வழக்கறிஞர் செல்வகுமார், பணி குழு தலைவர் கீதா முருகேசன், மண்டல தலைவர் நிர்மல், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கோட்டு ராஜா, ரவீந்திரன், மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் அருகே இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோ நகர், ரோச் பூங்கா, படகு குழாம் வரை 4 கீ.மி தூரம் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி பனிமய மாதா பேராலயம் அருகே நடைப்பயிற்சி முடிவடைந்தது. இதில் மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் 8 கிலோமீட்டர் நடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Tags:    

Similar News