கலெக்டர் தலைமையில் உள்ளூர் திட்டக்குழும கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் உள்ளூர் திட்டக்குழும கூட்டம் நடந்தது.;

Update: 2024-03-08 06:38 GMT

உள்ளூர் திட்டக்குழும கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உள்ளூர் திட்டக்குழும கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- உள்ளூர் திட்டக்குழும கூட்டம் ஒவ்வொரு மாதம் நடத்தப்படும். இதில் பொதுமக்களின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும். அதன்படி 2024-ம் ஆண்டிற்கான 2-வது உள்ளூர் திட்டக் குழும கூட்டம் தற்போது நடத்தப்பட்டது. சேலம் மாநகராட்சி, 2 நகராட்சி, 8 பேரூராட்சி, 277 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 1,273 கிலோ மீட்டர் பரப்பளவுடன் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு அரசிடம் ஒப்புதல் பெற்று உள்ளது. சேலம் உள்ளூர் திட்டப் பகுதிக்கான முழுமைத்திட்டத்தின் மீது பொதுமக்களின் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கும், திட்ட அறிக்கை, வரைபடம், நில உபயோக அட்டவணை, முழு திட்டம் தொடர்பான தகவல்களை www.salemlpamasterplan.com என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். இந்த திட்டம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் இருக்கும் பட்சத்தில் அதனை வருகிற ஏப்ரல் மாதம் 8-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் ஷஹானா உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News