வெளிமாநில தொழிலாளர்கள் வாக்களிக்க அறிவுறுத்தல்

கட்டுமான நிர்வாகத்திற்கு தொழிலக பாதுகாப்பு இயக்குநர் அதிரடி உத்தரவு

Update: 2024-03-27 13:20 GMT
வெளி மாநில தொழிலாளர்கள் வாக்களிக்க உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. . 

மக்களாவை தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளன்று அவர்களின் சொந்த ஊரில் இருக்க வசதியாக உரிய அறிவுரைகள் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிர்வாகத்தினர் தங்கள் தொழிற்சாலை மற்றும் கட்டுமான பணிகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் அவர்களது ஜனநாயக உரிமையான வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

இதனால், கூட்டங்கள் நடத்தி தொழிலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்குவதுடன் பணியிடங்களில் பிரதான இடங்களில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு வாசங்கள் பொருந்திய பதாகைகள் வைக்க வேண்டும் என்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News