கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறை : மயிலாடுதுறையில் போராட்டம்

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை சூறையாடியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-16 09:36 GMT

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை சூறையாடிய சமூக விரோதிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினார் மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி‌, இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலைக் கழகம்,

தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் மண் தன்னுரிமை இயக்கம், உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கண்டன உரையாற்றி சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News