டோல்கேடில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

புதூர் பாண்டியாபுரத்தில் உள்ள சுங்கசாவடியில் அடிப்படை வசதியின்மை மற்றும் இரண்டு முறை கட்டண வசூல் செய்வதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் செய்தனர்.

Update: 2024-06-03 09:29 GMT

தூத்துக்குடி புதூர் பாண்டிபுரம் பகுதியில் அமைந்துள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சுங்கச்சாவடி இந்த சுங்கச்சாவடியை மதுக்கான் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த மூலம் எடுத்து நடத்தி வருகிறது இந்த சுங்கச்சாவடி மாநகராட்சி எல்லையை தாண்டி 15 கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சுங்கச்சாவடியில் அனைத்து கவுண்டர்களும் செயல்படாமல் ஊழியர் பற்றாக்குறை காரணமாக இரண்டு கவுண்டர்கள் மற்றும் செயல்படுவதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது

மேலும் சுங்கசாவடியில் வாகன ஓட்டிகளுக்கு தேவையான குடிநீர் சுகாதார வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத சூழ்நிலை உள்ளது மேலும் சுங்கச்சாவடிக்கு வரும் தூத்துக்குடியை சேர்ந்த லாரிகளுக்கு 24 மணி நேரத்திற்கு ஒரு கட்டணம் இல்லாமல் இரண்டு முறை கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறதுஇதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்த பிரச்சனைகள் தொடர்பாக ஏற்கனவே உரிய நடவடிக்கை எடுக்க கோரி சுங்கச்சாவடியை நடத்தி வரும் மதுக்கான் நிறுவனத்திடம் தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன் சார்பில் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் அந்த நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை

இதைதொடர்ந்து இன்று புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடியில் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேசனை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் லாரி டிரைவர்கள் லாரிகளை சுங்கச்சாவடியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் நின்றன இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த மாநகராட்சி மேயரும் லாரி உரிமையாளர் சங்கத் தலைவருமான ஜெகன் பெரியசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் காவல்துறையினர் முன்னிலையில் சுங்கச்சாவடி மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு ஏற்படாத நிலையில் பொதுமக்கள் சிரமத்தை கணக்கில் கொண்டு லாரி உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர். இந்நிலையில் வருகிற ஏழாம் தேதிக்குள் சுங்கச்சாவடி நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் லாரி உரிமையாளர்கள் வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர் இந்தப் போராட்டம் திரும்ப பெற்றதை தொடர்ந்து அந்த பகுதி வழியாக சென்ற ஏராளமான வாகனங்கள் சுங்க கட்டணம் இல்லாமல் சென்றன.

Tags:    

Similar News