காவிரி ஆற்றில் மணல் கடத்திய லாரி மணலுடன் பறிமுதல்
காவிரி ஆற்றில் மணல் கடத்திய லாரி மணலுடன் காவல்துறை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்தது.
கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, ரங்கநாதபுரம் காவிரி ஆற்று பகுதியில், மணல் கடத்தல் நடைபெறுவதாக கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மகேந்திரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 30ஆம் தேதி நள்ளிரவு 2 மணியிலிருந்து 5 மணி வரை ரங்கநாதபுரம், பகவதி அம்மன் கோவில் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகன தணிக்கை மேற்கொண்டார்.
அப்போது அவ்வழியாக பெரம்பலூர் மாவட்டம், திருவளகுறிச்சி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் முருகேசன் என்பவர் டாரஸ் லாரியில் மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்து லாரியை மடக்கி பிடித்தார். மேலும், இது தொடர்பாக மாயனூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சடையனுக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரியையும், லாரியில் இருந்த ஒரு யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர். மேலும் முருகேசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.