திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ஏற்றம்
வனூர் அருகே திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
Update: 2024-06-24 10:33 GMT
விழுப்புரம் மாவட்டம் வனூர் அருகே திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆனிமாத பவுர்ணமியான கடந்த 21-ந்தேதி நள்ளிரவு 12 அளவில் கோவி லின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
இதில் திரளான பக்தர் கள் கலந்து கொண்டு ஓம் காளி, வக்ர காளி, ஜோதி, ஜோதி, வக்ரகாளி ஜோதி என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். இந்த நிகழ்வையொட்டி திருவக்கரைக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி ஆகிய வழித்தடத்தில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.