மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் - விவசாய பணி மேற்கொள்ள விண்ணப்பம்
Update: 2023-12-06 08:14 GMT
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் தனிநபர் பணிகளான பண்ணைக் குட்டைகள், மண் வரப்பு / கல் வரப்பு அமைத்தல், தோட்டக் கலை செடிகள் வளர்தல் / நாற்றங்கால் அமைக்கும் பணிகள், மற்றும் தனிநபர் நிலங்களில் பழவகை மரங்கள் நடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ள விரும்பும் நபர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 10.12.2023- விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். தேவையான ஆவணங்ககள் :1. சிறு/குறு விவசாயி சான்று நகல் 2. நில உடமைக்கான ஆவண நகல் 3. இலக்கு மக்கள் பட்டியல் (PIP) எண் 4. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட வேலை அடையாள அட்டை நகல் 5. ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு புத்தக நகல்