கரூர் அருகே மது விற்றவர் கைது
சின்னம நாயக்கன்பட்டியில் சட்டவிரோத மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 12:53 GMT
மதுபாட்டில்கள் பறிமுதல்
கோப்பு படம்
கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திலக் நேற்று மதியம் 1- மணி அளவில், சின்னமநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள மகேந்திரன் வீடு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம், சின்ன அஞ்சு கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜாய்தரன் (28) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 13 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.