பேப்பர் மில்லில் பழைய இரும்பு பொருட்கள் திருடியவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், தனியார் பேப்பர் மில்லில் இருப்பு பொருட்கள் திருடியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;

Update: 2024-02-22 01:32 GMT

பேப்பர் மில்லில் பழைய இரும்பு பொருட்கள் திருடியவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் தனியார் பேப்பர் மில் கம்பெனியில் வாட்ச்மேனாக பணிபுரிகிறார்.இந்த நிலையில் நேற்று மில்லில் பழைய இரும்பு பொருட்களை காணவில்லை.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சேர்மத்துரை என்பவர் பழைய இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சேர்மத்துரையை நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News