திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-23 09:48 GMT

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் விசாரணை செய்திட வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் நேற்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர குழு உறுப்பினர் ஆறு குட்டி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்திட வேண்டும் , மருத்துவ மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசு நடத்திட அனுமதி வழங்கிட வேண்டும் , 

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து கண்ணன் , தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால் , சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கச் செயலாளர் பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரியாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜ் , ஒன்றிய செயலாளர் லட்சுமி , வாலிபர் சங்க செயலாளர் சிந்தன் உள்ளிட்டோர் கண்டன உரை ஆற்றினர்.

Tags:    

Similar News