வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்
வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டத்தில் பக்தர்கள் தேர் இழுத்தனர்;
Update: 2024-02-23 11:02 GMT
தேர் இழுத்த பக்தர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் திருவிழாவான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அழகம்மன் கோவிலில் இருந்து விநாயகரும் அழகம்மனும் தட்டு வாகனத்தில் மேள தாளங்களுடன் எடுத்துவரப்பட்டனர். பின்னர் சிறிய தேரில் விநாயகரும் மற்றொரு தேரில் அழகம்மனும் எழுந்தருளினர். தேரின் வலது பக்க சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்ட பின், தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முதலில் விநாயகர் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதை தொடர்ந்து அழகம்மன் தேர் இழுத்துச் செல்லப்பட்டது. தேரோட்டத்தில் எம் ஆர் காந்தி எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பத்தாம் திருவிழாவான நாளை மாலை 5 மணிக்கு சுவாமியும் அம்பாளும் ஆறாட்டு துறைக்கு ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.