127 மாணவ மாணவிகளுக்கு மதுரா செந்தில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்
127 மாணவ மாணவிகளுக்கு மதுரா செந்தில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்
By : King 24x7 Website
Update: 2024-01-03 08:17 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மகாதேவ வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 11ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு படிக்கும் 73 மாணவர்களுக்கும்,54 மாணவிகளுக்கும் என மொத்தம் 127 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசிதம்பரம் அனைவரையும் வரவேற்றார் செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார், நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும்,நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினருமான திரு.மதுரா செந்தில் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார், மாண்புமிகு தளபதி தலைமையிலான தமிழக அரசு மாணவ மாணவிகளுக்கு எண்ணற்ற தேவைகளை செய்து வருகின்றனர் இலவச பஸ் பாஸ் முதல் பாட புத்தகங்கள் மற்றும் சத்துணவு வழங்கி வருகிறது, அதே போல் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களையும் வழங்கி வருகிறது இதுபோல் மாணவ மாணவர்களின் நலன் அக்கறை கொண்டுள்ள அரசுக்கு நாம் எப்பொழுதும் உறுதுணையாக இருந்து நல்ல மதிப்பெண் பெற்று அரசு அரசுக்கு நல்ல பெயர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், நிகழ்ச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம், மாவட்ட ஆயிலகா அணி அமைப்பாளர் சாதிக் பாட்ஷா, தொண்டரணி அமைப்பாளர் கருணாகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை தலைவர் நந்தகுமார் தகவல் தொழில்நுட்ப அணி ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர்