மாட்டு வண்டிகளுக்கு அனுமதி தர கோரிக்கை

கொள்ளிடம் ஆற்றில் சித்தமல்லி, குறிச்சி கிராம பகுதிகளில் மாட்டுவண்டிகள் மூலம் மணல் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டி மாட்டுவண்டி சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்

Update: 2024-06-24 12:33 GMT

கொள்ளிடம்

கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி வழங்க வலியுறுத்தி மாட்டுவண்டி சங்க தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரிகள் திறக்கப்படாததால் மாடுகளுக்கு தீவனம் மற்றும் பராமரிப்பு செலவு செய்யக்கூட வழி இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டம் அணைக்கரையில் மாட்டுவண்டிகளுக்கு மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் தங்களை புறக்கனிக்காமல் மாட்டு வண்டிகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் எடுக்க அரசு அனுமதி பெற்று தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News