மயிலாடுதுறையில் 17.2 மி. மீ. மழை பதிவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து இன்று காலை வரை மிகவும் லேசான மழையே பெய்தது. அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 17.2 மி,மீ, தரங்கம்பாடி 14.0 மி.மீ மழை பதிவானது.
Update: 2024-05-17 02:15 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை வரை பலத்த மழை பெய்திருந்தது. நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை மிகவும் லேசான மழையே. மயிலாடுதுறை பகுதியில் நேற்று காலை 7 மணி முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு : மயிலாடுதுறை 17.2 மி.மீ., மணல்மேடு 9மி.மீ., சீர்காழி 6.6மி.மீ., கொள்ளிடம்4.2மி.மீ., தரங்கம்பாடி 14.0 மி.மீ., செம்பனார்கோவில் 13.2மி.மீ., இன்று காலையிருந்து வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது மிகவும் லேசான தூரலே பணி மழை போல் காணப்படுகிறது.