மருத்துவ உபகரணம் வழங்கிய இண்டூர் பவர் கட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இண்டூர் பவர் கட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் சார்பில் ரூபாய் 67லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் அதி நவீன அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கினர்

Update: 2024-05-03 09:33 GMT

மருத்துவ உபகரணம் வழங்கல்

தருமபுரி மாவட்டம் இண்டூர் பவர்கிரிட் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் பொதுத் துறை நிறுவனம் சார்பாக சமூக பொறுப்பு நிதி 2023- 2024-ன் கீழ் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் பாலக்கோடு அரசு மருத்துவ மனைக்கு ரூபாய் 67 இலட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் அதி நவீன அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இஆப., பவர்கிரிட் கார்பரேசன் தலைமை பொது மேலாளர் (மனிதவள மேலாண்மை) பெங்களுரு மதிலேஸ்குமார்.

தருமபுரி மூத்த உதவி பொது மேலாளர் மா.பாலு ஆகியோர் வழங்கினர்கள்.இந்தநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், ஊரக நலப்பணிகள் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி, பென்னாகரம் மருத்துவ அலுவலர் கனிமொழி, பாலக்கோடு மருத்துவ அலுவலர் பாலசுப்பிரமணி, மருத்துவர்கள் மற்றும் பவர்கிரிட் கார்பரேசன் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Tags:    

Similar News