திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மூ.மு.க.தலைவர் வாக்குசேகரிப்பு
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள ரவுண்டானாவில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் மோட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேருவுக்கு நேற்றிரவு மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வாக்கு சேகரித்தார்.
Update: 2024-04-15 07:00 GMT
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள ரவுண்டானாவில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வாக்குகள் சேகரித்து பேசியதாவது மத்தியில் ஆளும் பாஜகவால் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. அப்போதைய முதல்வர் கருணாநிதியும் சரி, தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் சரி கள்ளர் சமூக மக்களுக்கு ஆதர வாகவே இருந்து வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதியாக கோதாவரியையும், காவிரியை யும் இணைப்போம் என்ற வாக்கு றுதியை அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரைப் பெற கர்நாடகத்திடம் நாம் கையேந்தும் நிலை மாறிவிடும். பச்சமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை ஆகிய பகுதிகளில் பெய்யக்கூடிய மழை நீர் ஆண்டுக்கு 600 டிஎம்சி. இந்த தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கி றது. இதை பயன்படுத்துதல் அவசியம் என்றார். இந்த பிரச்சாரத்தில், திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, நகரச் செயலர் துரைமாணிக்கம், ஒன்றியச் செயலர்கள் சண்மு கநாதன், பெரியய்யா, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.