கேரளாவிற்கு கனிமவளம் கடத்தல் - 8 லாரிகள் பறிமுதல்
கேரளாவிற்கு கனிமவள கடத்தி சென்ற 8 லாரிகளை கனிமவள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2023-10-27 10:08 GMT
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
கோவையில் இருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வரும் நிலையில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் கோவை கிணத்துக்கடவு மற்றும் மதுக்கரை சோதனைச் சாவடியில் கனிமவள அதிகாரிகள் காவல்துறையினருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது இவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டபோது உரிய அனுமதி இன்றி லாரிகளில் கற்களை ஏற்றி கேரளா மாநிலத்திற்கு எடுத்து செல்ல முயன்ற இருந்த எட்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.