அமைச்சர் சேகர் பாபு ஊட்டியில் சாமி தரிசனம்!

காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-05-03 06:28 GMT

அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அவ்வப்போது ஆய்வு செய்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு குடும்பமாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தொட்டபெட்டா பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் ஊட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதையடுத்து பேரூர் ஆதீனத்தின் கட்டுப்பாட்டு கீழ் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு, எவ்வாறு கோவில் செயல்பாடுகள் உள்ளது எனவும் கோவில் எவ்வாறு கட்டப்பட்டது எனவும் கேட்டு அறிந்தார். காந்தல் சுப்பிரமணியசாமி கோவில் சென்றார். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பார்வையிட்டார். பின்னர் பொக்காபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். முன்னதாக அவர் ஊட்டியில் நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை, சாமி தரிசனம் செய்ய வந்தேன். நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து முக்கிய கோவில்களும் செல்ல திட்டமிட்டு உள்ளேன் என்றார். அமைச்சர் பயணத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News