அமைச்சர் உதயநிதி வாகனம் சோதனை: வீடியோ வைரல் !
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்க ளில் வைரலாகி வருகிறது.;
அமைச்சர் உதயநிதி
தென்காசி தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த வாகனத்தில் கோடிக்கணக்கில் பணம் கொண்டு வரப்பட்டுள்ளது என தென்காசி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இதன் எதிரொலியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தென்காசி, கடையநல்லூர் சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு கோவில்பட்டிக்கு செல்லும் வழியில் கரட்டுமலை சோதனைச் சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த வாகனம் நிறுத்தப்பட்டு தேர்தல் பறக்கும் படையினரால் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்த வாகனத்தில் குறிப்பிடும் படி எதுவும் சிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.