வீடுவீடாக பிரச்சாரம் செய்த எம்எல்ஏ
விழுப்புரத்தில் திமுக அரசின் சாதனைகள் குறித்தான துண்டு பிரசுரங்களை எம்எல்ஏ வழங்கினார்.
விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணன் வீடு வீடாகச் சென்று தமிழக அரசின் சாதனைகள் விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர், வளவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், திமுக சார்பில் திண்ணை பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
அதனையொட்டி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், கோலியனூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றியச் செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய பெருந்தலைவர் சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் கோலியனூர் மார்க்கெட் வீதி, மாடவீதிகளில் உள்ள இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்னும் திண்ணை பிரசாரத்தில் கட்சியினர் ஈடுபட்டனர். தொடர்ந்து முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வளவனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வளவனூர் நான்கு முனை சந்திப்பில் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. டீ கடையில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் எம்எல்ஏ லட்சுமணன், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை விநியோகித்து விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தக்கா தெரு, புதுவை சாலை, மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
இதில் நகர செயலாளர் ஜீவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் TNJ சம்பத், மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் சுவை.சுரேஷ், பேரூராட்சி துணை தலைவர் அசோக், நகர முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சுபா.ராம்குமார் மற்றும் வார்டு செயலாளர்கள் PV.குமார், ராஜா, முருகன், கந்தசாமி, ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.