பருவமழை: தோட்டக்கலை பயிர்களைப் பாதிப்பிலிருந்து காக்க முன்னெச்சரிக்கை

Update: 2023-11-22 04:42 GMT

தோட்டக்கலை பயிர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 வடகிழக்கு பருவ மழை பொழியத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து காற்று மற்றும் மழைநீரிலிருந்து தோட்டக்கலை பயிர்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்க விவசாயிகள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரால் விவயாயிகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காலங்களில் தோட்டக்கலைப் பயிர்களை பாதிப்பிலிருந்து காக்க தகுந்த முன்னேற்பாடு பணிகளை செய்வது அவசியம் ஆகும். அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ள பயிர்களின் அறுவடையை விரைவில் மேற்கொள்ளலாம். மா, கொய்யா போன்ற பழ மரங்களை கவாத்து செய்து செய்து பலத்த காற்றினால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கலாம். கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தினை குறைக்க தகுந்த வடிகால் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். உபரி நீர் வடிந்த பின் நடவு,விதைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். காற்றினால் ஏற்படும் சேதத்தினை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு நேர் எதிர் திசையில் மூங்கில் கழிகளைக் கொண்டு முட்டு கொடுத்து வாழை போன்ற மரங்கள் சாயாத வண்ணம் பாதுகாக்கலாம். வாழை, மரவள்ளி போன்ற பயிர்களின் அடிப்பகுதியில் மண் அணைத்தல் வேண்டும். பந்தல் காய்கறிகள், மலர்ச்செடிகள் போன்றவற்றில் காய்ந்து போன இலைகளை அகற்றி நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். இதே போல் பசுமைக் குடில், நிழல் வலைக்குடிலின் அடிபாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதையும், உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதிகள் இல்லாமல் உள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், பயிர் சாகுபடி இழப்பீட்டிலிருந்து காத்துக்கொள்ள பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம். எனவே, மேற்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் சேதத்திலிருந்து தோட்டக்கலை பயிர்களை காத்துக் கொள்ள வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ். கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News